மலர்ச்சி ஒன்று
தமிழ், இலக்கிய வளம் மிக்க இனிய மொழி. பண்டைக் காலத்தில் குறைந்த அடிகளையுடைய தனிப்பாடல்கள் பல இயற்றபட்டன. அவை சுவை மிக்க நிகழ்சிகளை வருணித்தன; வாழ்வின் அரிய ஒழுக்கங்களை எடுத்துரைத்தன. அப்பாடல்களைத் தொகுத்துத் தொகை நூல்களாகப் பிற்காலப் புலவர்கள் அமைத்தனர். அவையே எட்டுத்தொகை நூல்களாயின. தமிழிலுள்ள மிகமிகப் பழமையான இலக்கியங்களான நூற்றுக்கும் மேற்பட்ட வேறு சில பாடல்களைத் தொகுத்தனர். அவையே பத்துப்பாட்டு நூல்களாயின.
இலக்கிய வரலாற்றில் அடுத்ததாக ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் உருவாகின. அவை காப்பியங்கள் எனப்பட்டன. தமிழில் முதன்முதலாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின. அதன்பின் தோன்றிய காப்பியங்களை அவற்றின் பெருமை நோக்கி, ஐம்பெரும் காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் பிரித்து அழைத்தனர்.

ஐம்பெரும் காப்பியங்கள் : சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள் : சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாக குமார காவியம்
சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் பாடியுள்ளார். காப்பியத்தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம் பற்றியும் அவன் வீடுபேறு அடைந்தமைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. கற்பனைத் திறனும் வருணனைத் திறனும், படிப்பவர் உள்ளத்தைக் கவரும்வண்ணம் அமைந்துள்ளது.
கோவலன்-கண்ணகி கதையைக் கூறுவது சிலப்பதிகாரம். இதனை இளங்கோவடிகள் இயற்றினார். இந்நூலில் முப்பெருங்காண்டங்கள் உள்ளன. சோழ நாட்டுப் பெருமையை புகார்க் காண்டத்திலும், பாண்டிய நாட்டுப் பெருமையை மதுரைக் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப் படுத்தியுள்ளார். தம் கற்பனை வளத்தாலும், கவிதை வன்மையாலும் இந்நூலைச் "சிந்தையை அல்லும் செந்தமிழ்க் காப்பிய"மாக அமைத்துள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தைத் தொடர்ந்து எழுந்ததொரு காப்பியம் மணிமேகலை. மாதவியுடன் கோவலன் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிறந்தவளே மணிமேகலை. இவள் துறவு பூண்டு, புத்த சமயத்தைச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையினை விரிவாகக் கூறுவதே இக்காப்பியம். இதனைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றியுள்ளார்.
சமண மத சார்புடைய நூல் வளையாபதி. பௌத்த மத சார்புடைய நூல் குண்டலகேசி. இவ்விரு நூல்களும் தற்போது முழுமையையகக் கிடைக்கப்பெறவில்லை.
சூளாமணியைத் தோலாமொழித் தேவர் இயற்றினார். சமண மத நூலான நீலகேசியை எழுதியவர் பெயர் தெரியவில்லை. உதயணன் வரலாற்றைக் கூறும் நூலே உதயண குமார காவியம். "உயிர்க் கொலை தீது" என்பதை வலியுறுத்த எழுந்த நூலே யசோதர காவியம். நாக குமார காவியம் பெயரளவில் வழங்கப்படுகிறதேயன்றி. அதனைப் பற்றி எக்குறிப்பும் தெரியவில்லை.

இவ்வாறு சுவைமிக்க இலக்கிய, இலக்கண நூல்கள் பல தமிழில் தோன்றியுள்ளன. அவை அனைத்தும் தமிழின் சிறப்பினையும், பெருமையிணையும் என்றென்றும் நிலைநாட்டுவன.
மலரும்...