ஈழத் தமிழரை இன்னல் சூழ்ந்தது!
பாழுஞ் சிங்களப் பகையால் நேர்ந்தது!
ஒடுக்கும் இனமாம் சிங்களப் பேரினம்
கொடுக்கும் துயரும் கொடுநெறி முறையும்
ஆண்ட தமிழரை அடிமை கொண்டது!
மாண்டது தமிழென மகிழ்வு பூண்டது!
வெகுண்டது தமிழினம் விடுதலை வேண்டியே!
மிகுந்தது நெருக்கடி மீள்போ ரினிலே!
வாழ்வை இழந்தே வாடுவார்
தாழ்வை நீக்கவே, தமிழீழம் காண்பாரே!
பேரரிவாளரும் பெரும்பகை அறிவார்!
பிறந்ததால் ஈழத்தில் இத்துனை துன்பம்!
இறந்தும் விடுதலை ஈழம் பெறவே!
படுதுயர் நெஞ்சே கொஞ்சமோ? பாராய்!
விடிவும் வருமோ விரைந்தே
முடியுமோ இன்னல் முற்றும் தீர்ந்ததே!