மலர்ச்சி இரண்டு
தமிழ் என்று தோன்றியது என்று கால வரையறுக்க முடியாது. அஃது இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும் அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. தீந்தமிழ் என்றும் இன்பத்தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளது. அதன் வடிவ அமைப்பே உயிருக்கு இன்பம் அளிக்கக்கூடியது. அதனுடைய சொற்களின் சொற்பொருள் சிறப்பும் அதன் உயர் இலல்புகளுள் முதன்மையானது.
ஆரியம் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர்த் தமிழ் பரத கண்டம் முழுவதும் பரவியிருந்தது. ஆரியம் வந்த பின்னர் தமிழை வழங்கும் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியிடை மட்டும் வழங்கியது. இசை, ஆட்சிப் போன்ற துறைகளில் பிற மொழிகளின் ஆதிக்கத்தால் வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சி பெற்றிராது கலப்புத் தமிழ், உருகுலைந்த த்காமிழ் என்ற நிலையிலேயே இன்று உள்ளது.
ஆயினும் தூய தமிழ்ப் பற்று உண்மைத்தமிழ்ப் புலவர் உள்ளங்களில் மறைந்துவிடவில்லை. நற்றமிழர்களும் அதனைப் போற்றினர். ஆங்கிலம் கற்ற தமிழர்களும் தூய தமிழே நற்றமிழாகும் என்னும் கருத்தை ஏற்றனர். சாமி.வேதாசலம் என்னும் தனித்தமிழ்ப் புலவர்த் தம் பெயரை மறைமலை அடிகள் என மாற்றினார். "இழந்த தமிழை மீட்போம்" என உறுதி பூண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் நலம் காக்கும் பணியில் தலைப்பட்டது. தமிழ்ப் பொழில் எனும் திங்களிதழை வெளியிட்டது. ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்திப் புலவர்ப் பெருமக்களைக் கொண்டு தூய தமிழ்ச் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தது. செந்தமிழ்ச் செல்வி போன்ற இதழ்களும் வெளிவந்தன.
'இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போன்ற முழக்கங்கள் எழுந்தன. எங்கு நோக்கினும் இன்பத்தமிழ், செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில் வண்டமிழ் ; 'நற்றமிழ் பேசுதலே நற்புலமைக்கு அழகு' என்ற எண்ணம் வலுபெற்றது.
தமிழ் என்னும் நறுமணக்கொடி கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் நாள்தோறும் நன்மலர்களைப் பூத்துக்கொண்டிருந்தது. பின்னர், பல்வேறு சூழ் நிலைகளால் பூக்கும் தன்மையை இழந்து பூவாத கொடியாகக் கருதும் நிலையை அடைந்தது. இப்போது மீண்டும் பூக்கத்தொடங்கியுள்ளது; மலர்கள் மணம் கமழத் தொடங்கியுள்ளன. தமிழ் என்னும் பழங்கொடி மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளது.

மலரும்...
No comments:
Post a Comment